சினிமா துளிகள்

‘சின்ட்ரெல்லா’ படத்தில் 3 வேடங்களில், ராய் லட்சுமி + "||" + Roy Lakshmi in 3 roles in the movie Cinderella

‘சின்ட்ரெல்லா’ படத்தில் 3 வேடங்களில், ராய் லட்சுமி

‘சின்ட்ரெல்லா’ படத்தில் 3 வேடங்களில், ராய் லட்சுமி
‘சின்ட்ரெல்லா’ படத்தில் 3 வேடங்களில், ராய் லட்சுமி
“கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினை தீர்ந்ததும் திரைக்கு வரயிருக்கும் படங்களில், ராய் லட்சுமி நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’வும் ஒன்று. இது, மாயாஜாலமும், மர்மங்களும் நிறைந்த படம்” என்று பேச ஆரம்பித்தார், அந்தப் படத்தின் டைரக்டர் வினோ வெங்கடேஷ். இவர், டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி டைரக்டராக இருந்தவர். ‘சின்ட்ரெல்லா’ படத்தை பற்றி அவர் மேலும் கூறுகிறார்:-

“இந்த படத்தில் ராய்லட்சுமிக்கு 3 வேடங்கள். தேவதை போன்ற அழகான தோற்றம் கொண்ட பெண், மியூசிக் பாண்டு வாத்திய குழுவைச் சேர்ந்த பெண், ‘துளசி’ என்ற வீட்டு வேலை செய்யும் பெண் என மூன்று வேடங் களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், ராய் லட்சுமி. ‘சின்ட்ரெல்லா’ என்ற அழகான பெண்ணின் ஜோடியாக ஒரு வெளிநாட்டுக்காரர் நடித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்.

சென்னையிலும், அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை கோவை சுப்பையா தயாரித்துள்ளார்.”

அதிகம் வாசிக்கப்பட்டவை