சினிமா துளிகள்

‘திட்டம் இரண்டு’ திகில் - மர்மங்கள் நிறைந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் + "||" + In the film full of mysteries, Aishwarya Rajesh

‘திட்டம் இரண்டு’ திகில் - மர்மங்கள் நிறைந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்

‘திட்டம் இரண்டு’ திகில் - மர்மங்கள் நிறைந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்
‘திட்டம் இரண்டு’ திகில் - மர்மங்கள் நிறைந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்
‘காக்கா முட்டை’ படத்தில் 2 சிறுவர்களுக்கு தாயாக, ‘தர்மதுரை’ படத்தில் திருமணம் தடைபட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் பரிதாபத்துக்குரிய பெண்ணாக, ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக, ‘கனா’ படத்தில் லட்சியத்தில் வெற்றி பெறும் துடிக்கும் கிரிக்கெட் வீராங்கனையாக பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து, அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர், ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர், இவர். தற்போது இவர் நடித்து வரும் புதிய படம் ‘திட்டம் இரண்டு.’ திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி வருகிறது. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும் படத்தின் மூலம் பேசப்பட்ட விக்னேஷ் கார்த்திக் டைரக்டு செய்கிறார். ‘திட்டம் இரண்டு’ படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-

“ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மர்மங்கள் நிறைந்த திகில் படம் இது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எதிர்பாராத திருப்பங்களை கொண்ட திரைக்கதை. கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கு முடிவடைந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும்.”