சினிமா துளிகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம் + "||" + Death of famous Hollywood actor

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி ஸ்டில்லர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
நியூயார்க்,

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி ஸ்டில்லர். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். லவ்வர்ஸ் அண் தி அதர் ஸ்டேரஞ்சர்ச், நாஸ்டி கேப்பிட்டல், ஏர்போர்ட் 1975, மை 5 வைவ்ஸ், இண்டி பெண்டட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். ஹெர்குலஸ், தி குட் வைப், மெர்ஸி உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்து இருக்கிறார். ஜெர்ரி ஸ்டில்லருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

இவரது மனைவி அன்னி மியாரா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு எமி ஸ்டில்லர் என்ற மகளும், பென் ஸ்டில்லர் என்ற மகனும் உள்ளனர். பென் ஸ்டில்லரும் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். தந்தை மரணம் அடைந்த தகவலை தெரிவித்த அவர், “எனது தாய்க்கு 62 வருடங்கள் சிறந்த கணவராகவும், எனக்கு சிறந்த தந்தையாகவும் இருந்தார்” என்று கூறியுள்ளார். ஜெர்ரி ஸ்டில்லர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.