சினிமா துளிகள்

நகைச்சுவை திகில் கலந்து ‘யாமிருக்க பயமே’ 2-ம் பாகம் + "||" + Comedy mixed with horror 'Yamirukka payamen'Part 2

நகைச்சுவை திகில் கலந்து ‘யாமிருக்க பயமே’ 2-ம் பாகம்

நகைச்சுவை திகில் கலந்து ‘யாமிருக்க பயமே’ 2-ம் பாகம்
‘யாமிருக்க பயமே’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க எல்ரெட் குமார் திட்டமிட்டுள்ளார்.
ஜீவா, சமந்தா நடித்த ‘நீதானே என் பொன்வசந்தம்’, ஜீவா, கார்த்திகா நடித்த ‘கோ’, சிம்பு, திரிஷா நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி நடித்த ‘யாமிருக்க பயமே’, பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா நடித்த ‘கோ 2’, ஜீவா, காஜல் அகர்வால் நடித்த ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களை தயாரித்தவர், எல்ரெட் குமார்.

இவர் அடுத்து, ‘யாமிருக்க பயமே’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் நகைச்சுவை கலந்த திகில் படமாக தயாராகிறது. இதற்காக பிரபல நடிகர், நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில், எல்ரெட் குமார் இன்னொரு புதிய படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்திலும் பிரபல நடிகர், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

2 படங்களையும் அதிக பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.