சினிமா துளிகள்

கைவிடப்பட்ட படத்தின் டைரக்டர் ஆனார், கிஷோர் + "||" + Kishore is the director of the abandoned film

கைவிடப்பட்ட படத்தின் டைரக்டர் ஆனார், கிஷோர்

கைவிடப்பட்ட படத்தின் டைரக்டர் ஆனார், கிஷோர்
பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டர் வெற்றிமாறன் அறிமுகம் செய்தார்.
நடிகர் கிஷோர், பெங்களூருவைச் சேர்ந்தவர். கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவரை, ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டர் வெற்றிமாறன் அறிமுகம் செய்தார். வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த கிஷோர், படத்துக்கு படம் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார்.

‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வட சென்னை’, ‘றெக்க’ ஆகிய படங்களில் இவருடைய திறமையான நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து கிஷோர், ‘கதவ்’ என்ற கன்னட படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தை ராகவ் என்ற டைரக்டர் இயக்கி வந்தார். கிஷோருடன், அனுபமா குமார் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

என்ன நடந்ததோ, தெரியவில்லை. ‘கதவ்’ படத்தின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு படப்பிடிப்பை தொடர முடியவில்லை. அந்தப் படம் கைவிடப்பட்டதாக பேசப்பட்டது. ‘கதவ்’ படத்தின் கதை மீது கிஷோருக்கு ஈர்ப்பு இருந்தது. அந்தப் படத்தை கைவிட அவர் விரும்பவில்லை.

அதனால், அவரே ‘கதவ்’ படத்தின் டைரக்டர் ஆனார். முழு வேகத்துடன் அவர் அந்த படத்தை இயக்கி வருகிறார்.