சினிமா துளிகள்

உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட உலக கோப்பை கிரிக்கெட் பற்றிய படம் + "||" + Picture of World Cup cricket

உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட உலக கோப்பை கிரிக்கெட் பற்றிய படம்

உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட உலக கோப்பை கிரிக்கெட் பற்றிய படம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கருவாக வைத்து, ‘83’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகிறது.
விளையாட்டுப் போட்டிகளை கதைக்களமாக கொண்ட படங்கள், எப்போதுமே வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கருவாக வைத்து, ‘83’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகிறது.

1983-ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அணி சிறப்பாக ஆடி, இறுதி சுற்று வரை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன், இந்திய அணி வீரர்களே அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை.

இவற்றுக்கெல்லாம் மாறாக, இந்திய அணி மிக சிறப்பாக ஆடி கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றது. இந்த உண்மை சம்பவங்களுடன் சில சுவாரசியமான சம்பவங்களையும் சேர்த்து, 83 படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள்.

தீபிகா படுகோன், விஷ்ணுவர்தன், இந்தூரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கபீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், படத்தை இயக்கு கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது.