அர்ஜூன் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் அர்ஜூன் சமீபகாலமாக மற்ற கதா நாயகர்களுடன் இணைந்து வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது முதல் முறையாக ஜீவாவுடன் சேர்ந்து நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘மேதாவி’ என்று பெயர் வைத்துள்ளனர். கதாநாயகியாக ராஷி கன்னா நடிக்கிறார். ராதாரவி, அழகம் பெருமாள், ஒய்.ஜி.மகேந்திரன், ரோகிணி, சாரதி, தினா, பிரியங்கா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். திகில் கதையம்சம் கொண்ட பேய் படமாக தயாராகிறது. இந்த படத்தை பிரபல பாடல் ஆசிரியர் பா.விஜய் இயக்குகிறார்.
இவர் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஸ்ட்ராபெர்ரி’ என்ற பேய் படத்தில் நடித்து இயக்கி இருந்தார். அந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் பேய் படத்தை எடுக்கிறார். இந்த படத்தை மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில் சு.ராஜா தயாரிக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.