ஒரு வருடத்தில் 23 படங்கள் நடித்து சாதனை புரிந்த தமிழ் பட கதாநாயகி என்ற பெருமை பெற்றவர், முன்னாள் நாயகி ஜெயசித்ரா.
‘இது எப்படி முடிந்தது?’ என்று அவரிடம் கேட்டதற்கு, “காலையில் சென்னை, மதியம் ஐதராபாத், இரவில் பெங்களூரு என்று பறந்து கொண்டே இருந்தேன்” என்கிறார். (ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழி படங்களில் நடித்ததைத்தான் அவர் இப்படி குறிப்பிட்டார்).
அவர் மேலும் கூறும்போது, “விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, பல் துலக்கின காலம் எல்லாம் உண்டு” என்றார்.