சினிமா துளிகள்

மோகன்லால் - திரிஷாவுடன் ‘திரிஷ்யம்’ டைரக்டரின் புதிய படம் + "||" + New movie of 'Trisham' digital director

மோகன்லால் - திரிஷாவுடன் ‘திரிஷ்யம்’ டைரக்டரின் புதிய படம்

மோகன்லால் - திரிஷாவுடன் ‘திரிஷ்யம்’ டைரக்டரின் புதிய படம்
மோகன்லால் - திரிஷாவுடன் ‘திரிஷ்யம்’ டைரக்டரின் புதிய படம்
மோகன்லால், மீனா நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய மலையாள படம், ‘திரிஷ்யம்.’ இந்தப் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தற்போது மோகன்லால்- திரிஷா ஜோடியை வைத்து ‘ராம்’ என்ற படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் இயக்குகிறார். பிரபல பைனான்சியரும், வினியோகஸ்தருமான ரமேஷ் பி.பிள்ளை, இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.


‘திரிஷ்யம்’ படத்துக்குப்பின், மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும் இணையும் படம், இது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. ஓணம் விருந்தாக, ‘ராம்’ திரைக்கு வர இருக்கிறது. மோகன்லால் - திரிஷாவுடன், இந்திரஜித், சாய்குமார், சித்திக், சுமன், மேனகா சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் ரூ.50 கோடி செலவில் தயாராகிறது. தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை, சமீபத்தில் திரைக்கு வந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை தயாரித்தவர். இப்போது எழில் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தை தயாரித்து வருகிறார்.