சினிமா துளிகள்

ஜோதிகா படத்தைத் தொடர்ந்து இணையதளத்தில், மேலும் 7 புதிய படங்கள் + "||" + On the website, 7 more new pictures

ஜோதிகா படத்தைத் தொடர்ந்து இணையதளத்தில், மேலும் 7 புதிய படங்கள்

ஜோதிகா படத்தைத் தொடர்ந்து இணையதளத்தில், மேலும் 7 புதிய படங்கள்
ஜோதிகா படத்தைத் தொடர்ந்து இணையதளத்தில், மேலும் 7 புதிய படங்கள்
ஜோதிகா கதை நாயகியாக நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில், அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதுபற்றி அந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறிய தாவது:-

“சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தயாரித்துள்ளனர். அமேசான், பிரைம் வீடியோ ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து இணைய தளங்களில் வெளியிடுகின்றன. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் படத்தைப் பார்க்கலாம்.


இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக கோர்ட்டு சீன்கள் இருக்கும். ஜோதிகாவுடன் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். சாதாரண மக்களின் அன்றாட பிரச்சினைகளை குடும்பப்பாசம், நகைச் சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். ஜெ.ஜெ.பிரடரிக் இயக்கியிருக்கிறார்.

‘பொன்மகள் வந்தாள்’ படத்துடன் அனுஷ்கா சர்மா நடித்த ‘நிசப்தம்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பென்குயின்’, வித்யாபாலன் நடித்த ‘சகுந்தலாதேவி’ உள்பட 7 படங்கள் இணையதளத்தில் வெளிவர தயாராக இருப்பதாக பேசப் படுகிறது.”


தொடர்புடைய செய்திகள்

1. இணையதளத்தில் கடன் பெற ஆசைப்பட்டு ரூ.1.50 லட்சத்தை இழந்த தனியார் நிறுவன அதிகாரி
ஓசூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி இணையதளத்தில் கடன் பெற ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.