சினிமா துளிகள்

பா.விஜய் இயக்கும் படத்தில் ‘‘விசாரணை அதிகாரியாக அர்ஜுன்; உதவி டைரக்டராக ஜீவா” + "||" + In the film directed by Vijay Arjun as interrogator

பா.விஜய் இயக்கும் படத்தில் ‘‘விசாரணை அதிகாரியாக அர்ஜுன்; உதவி டைரக்டராக ஜீவா”

பா.விஜய் இயக்கும் படத்தில் ‘‘விசாரணை அதிகாரியாக அர்ஜுன்; உதவி டைரக்டராக ஜீவா”
பா.விஜய் இயக்கும் படத்தில் ‘‘விசாரணை அதிகாரியாக அர்ஜுன்; உதவி டைரக்டராக ஜீவா”
அர்ஜுன், ஜீவா ஆகிய இருவரும், ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்துக்கு, ‘மேதாவி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சு.ராஜா தயாரிக்கிறார். பாடல் ஆசிரியர், நடிகர், டைரக்டரான பா.விஜய், இந்தப் படத்தை இயக்குகிறார்.


படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“இது, ஒரு திகில் படம். நான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் உண்மை சம்பவங்கள் இருக்கும். நேர்த்தியான கதையும், சமூக கருத்தும் இருக்கும். இதற்கு முன்பு இயக்கிய ‘ஸ்ட்ராபெர்ரி’, திகில் படம் என்றாலும், அதில் ஒரு கருத்தை சொல்லியிருந்தேன். அடுத்து நடித்து இயக்கிய ‘ஆருத்ரா’ படத்திலும் ஒரு கருத்து இருந்தது.

‘மேதாவி’ படத்தில் அர்ஜுன், ஜீவா ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அர்ஜுன் ஒரு விசாரணை அதிகாரியாகவும், ஜீவா, திரைப்பட உதவி டைரக்டராகவும் வருவார்கள். கதாநாயகி, ராசிகன்னா. இவர், வெளிநாட்டில் இருந்து வரும் பத்திரிகை நிருபராக நடிக்கிறார். இது, ஒரு குற்ற பின்னணியிலான திகில் படம். ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம்பெருமாள், ரோகிணி ஆகிய 4 பேரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திலும் ஒரு சமூக கருத்து இருக்கும்” என்றார், பா.விஜய்!

அதிகம் வாசிக்கப்பட்டவை