முகக்கவசம் அணியுங்கள்,சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் - நடிகர் அபிஷேக் பச்சன் வேண்டுகோள்


முகக்கவசம் அணியுங்கள்,சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் -  நடிகர் அபிஷேக் பச்சன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 Sep 2020 6:15 AM GMT (Updated: 7 Sep 2020 8:34 AM GMT)

அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை,

உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியாமல் அரசுகள் கையை பிசைந்தே நிற்கின்றன. மனித குலத்தின் இயல்பு வாழ்க்கையையும், அரசுகளின் சுமுக செயல்பாட்டுக்கும் இந்த கொரோனா தொடர்ந்து தடை போட்டு உள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கைவரப்பெறாததால் கொரோனாவின் வெறியாட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து படுபாதக செயல்களை அரங்கேற்றி வரும் கொரோனா இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரத்து 802-பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

சமீபத்தில் அபிஷேக் பச்சனுடன் அவரது தந்தை அமிதாப் பச்சனுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறதி செய்யப்பட்டது. பின்னா் அபிஷேக்கின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய், அவா்களது மகள் ஆராத்யா ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனா். அவா்கள் அனைவருமே மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

ஐஸ்வா்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், கடந்த மாதத் தொடக்கத்தில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

கொரோனாவிலிருந்து சமீபத்தில் மீண்ட பிரபல நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தானும் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அபிஷேக் பச்சன் கூறினார்.

இந்நிலையில் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story