சினிமா செய்திகள்

ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு! + "||" + Lijo's Malayalam film 'Jallikattu' is India's official entry for Oscars

ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு!

ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு!
ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்கள் பட்டியலில் இந்த திரைப்படம்  தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு, இந்திய திரைப்பட கூட்டமைப்பு (எப்.எப்.ஐ)   சார்பில் சிறந்த சர்வதேச அம்ச பிரிவில் ஆஸ்கார்  விருதுக்காக இந்தியாவின் சார்பில்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமாத் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு எருமையை ஒரு கிராமம் அதைப் பிடிக்க முயற்சிக்கிறது. இது மனித நாகரிகம் பற்றிய ஒரு உருவகக் கதையாகும்.

லிஜோ கடந்த காலத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ் மற்றும் ஈ.மா.யு போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களை உருவாக்கியுள்ளார்.

இந்தியாவிl  2019 ஆம் ஆண்டு சோயா அக்தரின் கல்லி பாய் தேர்வானது  இதில் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் ஆகியோர் நடித்து இருந்தனர். கல்லி பாய் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், பல சினிமா ரசிகர்கள் இந்த தேர்வை  விமர்சித்தனர்.

ஆஸ்கார் விருது பட்டியலுக்கு இந்தியன், நியூட்டன், பார்பி, பீப்லி லைவ் போன்ற திரைப்படங்கள் முந்தைய ஆண்டுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதுவரை, எந்த இந்திய படமும் சிறந்த சர்வதேச அம்ச பிரிவில் அகாடமி விருதை வெல்லவில்லை. மூன்று படங்களுக்கு மட்டுமே ஆஸ்கார் பட்டியல் பரிந்துரையி இடம் பெற்று  உள்ளது . அவை மதர் இந்தியா (1957), சலாம் பம்பாய் (1988) மற்றும் லகான் (2001) - இவை அனைத்தும் இந்தி மொழி படங்கள் ஆகும்.

குரு (1997) மற்றும் ஆதாமின்டே மகன் அபு (2011) ஆகிய படங்களுக்கு பிறகு அகாடமி விருதுகளுக்கு இந்தியாவில் தேர்வு செய்யபட்ட  மூன்றாவது மலையாள திரைப்படம் ஜல்லிக்கட்டு ஆகும். 93 வது அகாடமி விருதுகள் ஏப்ரல் 25, 2021 அன்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறு கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்
நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ பட காட்சிகள் கசிந்த விவகாரத்தில் டிஜிட்டல் நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பாளர் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
2. விஜயின் மாஸ்டர் திரைப்படம் எப்படி இருக்கிறது...?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
3. விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா டீசர் வெளியீடு
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
4. லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ரா போலீசார் எச்சரிக்கை
பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
5. திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி விதி மீறல் - தமிழக அரசுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல்என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.