சினிமா துளிகள்

நயன்தாராவுடன் நடிக்க சமந்தா நிபந்தனை + "||" + To act with Nayantara Samantha condition

நயன்தாராவுடன் நடிக்க சமந்தா நிபந்தனை

நயன்தாராவுடன் நடிக்க சமந்தா நிபந்தனை
‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’   இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, நயன்தாராவும், சமந்தாவும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம், இது. அனிருத் இசையமைக்கிறார்.

சமந்தா இப்போது கர்ப்பமாக இருப்பதால், ஒரு நிபந்தனை விதித்து இருக்கிறார். படப்பிடிப்பை சீக்கிரமே தொடங்கி, தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கி விடுங்கள் என்று படக் குழுவினரை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய நிபந்தனையை விக்னேஷ் சிவன் ஏற்றுக்கொண்டார்.