சினிமா துளிகள்

மீண்டும் காதலில் வனிதா? + "||" + Actress Vanitha in love again

மீண்டும் காதலில் வனிதா?

மீண்டும் காதலில் வனிதா?
நடிகை வனிதா ஏற்கனவே நடிகர் ஆகாஷை மணந்து 2007-ல் விவாகரத்து செய்தார். பின்னர் ராஜன் ஆனந்த் என்பவரை 2-வது திருமணம் செய்து அவரையும் 2012-ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்தார். இது சர்ச்சையானது. பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர் என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் அவரை மணந்தது தவறு என்றும் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்டோர் விமர்சித்தனர். லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் ஒருவருக்கொருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் மோதினர். பின்னர் அளவுக்கு மீறி பீட்டர் பால் மது அருந்துவதாக அவருடன் தகராறு செய்து வனிதா பிரிந்தார். இது பரபரப்பானது. இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மீண்டும் காதலில். உங்களுக்கு இப்போது சந்தோஷமா” என்ற பதிவை வெளியிட்டு இருக்கிறார். வேறு தகவல் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. இதனால் வனிதா இன்னொருவரை காதலிக்கிறாரா? என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கதாநாயகியாக நடிக்கும் வனிதா
வனிதாவுக்கு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம் என்றும் படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை