சினிமா துளிகள்

வில்லனாகும் ஜெய் + "||" + Jay is the villain acting

வில்லனாகும் ஜெய்

வில்லனாகும் ஜெய்
கதாநாயகர்கள் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வப்படுகின்றனர். முன்னணி கதாநாயகர்கள் ஏற்கனவே வில்லன் வேடங்களை ஏற்றுள்ளனர்.
தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியும், விஷால் படத்தில் ஆர்யாவும் வில்லனாக நடிக்கின்றனர். அடுத்து ஜெய்யும் வில்லன் வேடம் ஏற்கிறார். இவர் சென்னை 22, கனிமொழி, வாமனன், அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், வடகறி, திருமணம் எனும் நிக்கா, பலூன் உள்பட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். ஜெய் வில்லனாக நடிக்கும் படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்கி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கின்றனர். இந்த படத்தை பத்ரி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நாங்க ரொம்ப பிஸி’ படத்தை இயக்கி இருந்தார். இதில் பிரசன்னா, ஷாம், யோகிபாபு ஆகியோர் நடித்தனர். இந்த படம் தீபாவளி பண்டிகையில் நேரடியாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது.