சினிமா துளிகள்

பேய் கதையில் பிரபுதேவா ஜோடியாக காஜல் அகர்வால் + "||" + In the ghost story Prabhudeva paired up Kajal Agarwal

பேய் கதையில் பிரபுதேவா ஜோடியாக காஜல் அகர்வால்

பேய் கதையில் பிரபுதேவா ஜோடியாக காஜல் அகர்வால்
பேய் படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் அதுமாதிரியான படங்கள் அதிகம் வருகின்றன.
 முன்னணி நடிகர், நடிகைகள் திகில் படங்களில் நடித்துள்ளனர். தற்போது பிரபுதேவாவும், காஜல் அகர்வாலும் பேய் படத்தில் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை டீகே இயக்குகிறார். இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். இதில் யாமிருக்க பயமே பேய் கதையம்சம் உள்ள படமாக வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதனால் மீண்டும் பேய் படம் எடுக்க வருகிறார். காஜல் அகர்வால் சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிட்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது சிரஞ்சீவியுடன் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் பேய் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இதில் மொத்தம் 4 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். பிரபுதேவா கைவசம் தமிழில் மேலும் 4 படங்கள் உள்ளன.