கொரோனா கால உதவிகள்: வில்லன் சோனு சூட்டுக்கு கதாநாயகன் வாய்ப்புகள்


கொரோனா கால உதவிகள்: வில்லன் சோனு சூட்டுக்கு கதாநாயகன் வாய்ப்புகள்
x
தினத்தந்தி 21 Dec 2020 11:00 PM GMT (Updated: 21 Dec 2020 8:52 PM GMT)

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சோனுசூட்.

தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. நிறைய இந்தி படங்களிலும் வில்லன் வேடங்கள் ஏற்றுள்ளார். இந்த நிலையில் கொரோனா காலத்தில் செய்த உதவிகள் மூலம் சோனுசூட் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பினார். 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து கொடுத்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனிவிமானத்தில் அழைத்து வந்தார். நாடு முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இதனால் சோனுசூட்டுக்கு தற்போது வில்லனுக்கு பதிலாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு தற்போது கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. 5 நல்ல கதைகள் உள்ளன. இதை ஒரு புதிய ஆரம்பமாக கருதுகிறேன். எனது பெற்றோர்களின் ஆசிர்வாதம் பலன் அளித்துள்ளது” என்றார்.


Next Story