சினிமா துளிகள்

2 இந்தி படங்களில் ராஷ்மிகா மந்தனா + "||" + Rashmika Mandana in 2 Hindi films

2 இந்தி படங்களில் ராஷ்மிகா மந்தனா

2 இந்தி படங்களில் ராஷ்மிகா மந்தனா
கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் நடித்துள்ளார். விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்த டியர் காமரேட் படம் தமிழ், தெலுங்கில் வெளியானது.
தற்போது கார்த்தி ஜோடியாக நடித்துள்ள சுல்தான் படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த நிலையில் ராஷ்மிகா புதிதாக 2 இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒரு படத்துக்கு மிஷன் மஜ்னு என்று பெயர் வைத்துள்ளனர். இதில் சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக வருகிறார். பாகிஸ்தானில் இந்தியா நடத்திய உளவு வேலைகள் பற்றிய கதையம்சத்தில் உண்மை சம்பவங்களுடன் தயாராகிறது. இந்த படத்தை ஷாந்தனு பாக்ஜி இயக்குகிறார். படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. அமிதாப்பச்சனுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை விகாஸ் பால் இயக்குகிறார் தந்தை மகள் பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது.