சினிமா துளிகள்

பிரபல கன்னட டைரக்டர் மரணம் + "||" + Death of famous Kannada director

பிரபல கன்னட டைரக்டர் மரணம்

பிரபல கன்னட டைரக்டர் மரணம்
பிரபல கன்னட டைரக்டர் பரத். இவர் ஸ்ரீமுரளி, மும்தாஜ், ரம்யா நடித்த காண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இந்த படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து முன்னணி கன்னட நடிகர் ரவிச்சந்திரன் மகன் கதாநாயகனாக அறிமுகமான சஹேபா உள்ளிட்ட மேலும் சில படங்களை இயக்கி உள்ளார். பரத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். திடீரென்று உடல் நிலை மோசமானதால் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. பரத் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பல பிரபலங்கள் மரணம் அடைந்துள்ளனர்.