மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து பல படங்களில் நடித்து பிரபலமானவர் ராகுல் ரவி.
தமிழில் நந்தினி தொலைக்காட்சி தொடரில் நாயகனாக நடித்தார். பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய சாக்லெட் தொடரிலும் நாயகனாக நடித்தார். தற்போது கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு லட்சுமி நாயர் என்பவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார். காதலியின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ராகுல் ரவி-லட்சுமி நாயர் திருமணம் கேரள மாநிலம் பெரும்பாவூரில் நடந்தது. கொரோனா விதிமுறைகளால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த படம் ரெமோ. இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த காட்சிகள் வரவேற்பை பெற்றன. இந்த படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன்.
2 ஒரே பாலின தம்பதியரின் விசித்திரமான வழக்குகள் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. இதில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.