சினிமா துளிகள்

“நான் 2020-ல் கற்றுக் கொண்ட பாடங்கள்” - அமலாபால் + "||" + I'm in 2020 Lessons Learned Amalapal

“நான் 2020-ல் கற்றுக் கொண்ட பாடங்கள்” - அமலாபால்

“நான் 2020-ல் கற்றுக் கொண்ட பாடங்கள்” - அமலாபால்
தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அமலாபால் இந்த வருட அனுபவங்களை பகிர்ந்தார். அவர் கூறியதாவது.
“2020-ம் ஆண்டு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்து உள்ளது. புதிதாக சில முடிவுகளையும் எடுத்து இருக்கிறேன். ஆன்மிக உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. தான் என்ற அகந்தை மறைந்து விட்டது. அந்த அகந்தையில் இருந்து விழித்து எழுந்து இருக்கிறேன். எனக்குள் இருக்கிற குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு கொடுத்தேன். எனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கவுரவமாகவும், நன்றியோடும் ஏற்றுக்கொண்டேன். வருத்தம், வேதனை, கஷ்டம் போன்றவற்றில் இருந்து ஓடிப்போய்விட வேண்டும் என்று நினைத்தது இல்லை. அவற்றில் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொண்டேன். பழைய சினேகிதர்களை சந்திக்க செல்ல வேண்டும். விரோதிகளை மன்னிக்க வேண்டும். நம்மை அறிந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் 2020-ல் நான் புதிதாக கற்றுக்கொண்ட பாடங்கள்.” இவ்வாறு அமலாபால் கூறினார்.