சினிமா செய்திகள்

கடவுள்கள் பற்றி அவதூறு: நகைச்சுவை நடிகர் கைது + "||" + Slander about the gods Comedian arrested

கடவுள்கள் பற்றி அவதூறு: நகைச்சுவை நடிகர் கைது

கடவுள்கள் பற்றி அவதூறு: நகைச்சுவை நடிகர் கைது
பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகி. குஜராத்தை சேர்ந்த இவர் பொது மேடைகளில் சர்ச்சை கருத்துகளை பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் இந்தூர் டூகான் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது இந்து கடவுள்கள் பற்றியும், மத்திய மந்திரி அமித்ஷா குறித்தும் அவதூறான கருத்துகளை பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின. முனாவர் பாரூகி மீது நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ மாலினி லட்சுமணன் சிங் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாவர் பாரூகியை கைது செய்தனர். அவருடன் மேலும் 4 பேரும் கைதானார்கள். முனாவர் பாரூகி உள்பட கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் மத உணர்வை தூண்டுதல், கவனக்குறைவான செயலால் தொற்றுநோயை பரப்ப காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.