சினிமா துளிகள்

‘ருத்ரன்’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் + "||" + Rudran in the film Lawrence paired up Priya Bhavani Shankar

‘ருத்ரன்’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர்

‘ருத்ரன்’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர்
லாரன்ஸ் ருத்ரன் என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கதிரேசன் தயாரிக்கிறார்.
சந்திரமுகி 2-ம் பாகத்தில் லாரன்ஸ் நடிப்பதாக இருந்தது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பட்ஜெட் பிரச்சினைகளால் அதன் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில் லாரன்ஸ் ருத்ரன் என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கதிரேசன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் இயக்குனர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் ருத்ரன் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிப்பதாக அறிவித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் 2017-ல் மேயாத மான் படத்தில் அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன்-2, குருதி ஆட்டம், பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.