சினிமா துளிகள்

தொழில் அதிபரை மணக்கும் இந்தி நடிகை + "||" + Hindi actress marries a businessman

தொழில் அதிபரை மணக்கும் இந்தி நடிகை

தொழில் அதிபரை மணக்கும் இந்தி நடிகை
பிரபல இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர். இவர் மன், டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் அடிக்கடி நீச்சல் உடை படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார். சமீபத்தில் சிங்க குட்டிக்கு ஷாமா புட்டிப்பால் கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. ஷாமா சிக்கந்தருக்கும், அமெரிக்க தொழில் அதிபரான ஜேம்ஸ் மில்லிரான் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து ஷாமா கூறும்போது, ‘’நாங்கள் சந்தித்த உடனேயே மனதளவில் திருமணம் செய்து கொண்டோம். சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமண வாழ்க்கை கசந்தது; கணவரை விவாகரத்து செய்த நடிகை
திருமண வாழ்க்கை கசந்ததில் இந்தி நடிகை மினிஷா லம்பா கணவரை விவாகரத்து செய்துள்ளார்.