சினிமா துளிகள்

4 ஆண்டுகளாக முடங்கிய செல்வராகவன் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ் + "||" + Selvaragavan 4 years unreleased film released on OTT

4 ஆண்டுகளாக முடங்கிய செல்வராகவன் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்

4 ஆண்டுகளாக முடங்கிய செல்வராகவன் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
கொரோனாவால் சூர்யாவின் சூரரை போற்று, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், கீர்த்தி சுரேசின் பென்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, அனுஷ்காவின் நிசப்தம் மற்றும் லாக்கப் உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டன.
தற்போது மாதவன் நடித்த மாறா படமும் ஓ.டி.டியில் வந்துள்ளது. அடுத்து ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படமும் ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரேம்ஜி அமரன், ரெஜினா, நந்திதா ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பையும், தொழில்நுட்ப பணிகளையும் 2016-ம் ஆண்டிலேயே முடித்தும், பல்வேறு காரணங்களால் திரைக்கு வராமல் முடங்கியது. 4 வருடங்களுக்கு பிறகு ஓ.டி.டி தளத்தில் வெளியிடும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற சினிமா படப்பிடிப்பு
மண்டபம் கடற்கரை பூங்காவில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற சினிமா படப்பிடிப்பு நடந்தது