நயன்தாராவின் இந்தி ரீமேக் படப்பிடிப்பில் ஆர்ப்பாட்டம்


நயன்தாராவின் இந்தி ரீமேக் படப்பிடிப்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Jan 2021 9:27 PM GMT (Updated: 15 Jan 2021 9:27 PM GMT)

கோலமாவு கோகிலா படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

நயன்தாரா நடித்து 2018-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற கோலமாவு கோகிலா படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார். இவர் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகள். ஏற்கனவே தடக் இந்தி படத்தில் அறிமுகமான ஜான்வி கபூர் குஞ்சன் சக்சேனா படத்திலும் நடித்துள்ளார். குட்லக் ஜெர்ரி படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் பாஸி பதானா நகரில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தை விவசாயிகள் திடீரென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு இந்தி நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பல மணிநேரம் தடைபட்டது.

அவர்களிடம் ஜான்விகபூர் ஆதரவு தெரிவிப்பார் என்று படக்குழுவினர் உறுதியளித்தபின் கலைந்து சென்றனர். பின்னர் ஜான்விகபூர் வலைத்தளத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டார்.

Next Story