சினிமா துளிகள்

தனுசின் புதிய படம் ‘நானே வருவேன்' + "||" + Dhanush new film I will come myself

தனுசின் புதிய படம் ‘நானே வருவேன்'

தனுசின் புதிய படம் ‘நானே வருவேன்'
தனுஷ் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இந்தியில் அந்த்ரங்கி ரே படத்தில் நடித்தார்.
இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது தனுசுக்கு 43-வது படம். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இந்த படத்தை முடித்து விட்டு செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே செல்வரகாவன் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘என்னை செதுக்கிய செல்வராகவனுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. இந்த தடவையாவது அவரை கவர்வேன் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில் படத்துக்கு நானே வருவேன் என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவித்து தனுஷ் தோற்றத்தையும் செல்வராகவன் வெளியிட்டு உள்ளார்.