சினிமா துளிகள்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவாக அரவிந்தசாமி-கங்கனா நடிக்கும் புகைப்படம் + "||" + M.G.R., As Jayalalithaa Aravindasamy Photo starring Kangana

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவாக அரவிந்தசாமி-கங்கனா நடிக்கும் புகைப்படம்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவாக அரவிந்தசாமி-கங்கனா நடிக்கும் புகைப்படம்
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். விஜய் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி உள்ளது. விஷ்ணு வர்தன் இந்தூரி, சய்லேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு விஜயேந்திரபிரசாத் திரைக்கதை எழுதி உள்ளார். கங்கனா ரணாவத், அரவிந்தசாமி தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இந்தநிலையில் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளையொட்டி நேற்று எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்தசாமியும், ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத்தும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை புதிய தோற்றத்துடன் படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்த காலத்தை நினைவூட்டுவதாக புகைப்படம் உள்ளது என்றும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை கண்டித்து மாடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
எருமப்பட்டி அருகே சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தி்்ல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.