சினிமா துளிகள்

மீண்டும் தனுஷ் ஜோடியாக தமன்னா + "||" + Again Dhanush paired up Tamanna

மீண்டும் தனுஷ் ஜோடியாக தமன்னா

மீண்டும் தனுஷ் ஜோடியாக தமன்னா
தனுஷ் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் இந்தியில் அந்த்ரங்கி ரே ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது தனுசுக்கு 43-வது படம். படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு நானே வருவேன் என்று பெயர் வைத்துள்ளனர். திகில் கதையம்சம் உள்ள அதிரடி படமாக தயாராகிறது.

ஏற்கனவே செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். நானே வருவேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேசி இருப்பதாகவும், அவர் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே படிக்காதவன், வேங்கை படங்களில் தனுசும், தமன்னாவும் ஜோடியாக நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் விக்ரம் ஜோடியாக சிம்ரன்
கோப்ரா படப்பிடிப்பு சமீபத்தில் ரஷியாவில் நடந்தது. இது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார்.
2. மீண்டும்
படத்தின் சினிமா முன்னோட்டம் சரவணன் சுப்பையா இயக்கத்தில் ‘மீண்டும்’ சினிமா முன்னோட்டம்.
3. மீண்டும் நடிக்கும் தீபன்
பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனுடன் நடித்து பிரபலமானவர் தீபன். அந்த படத்தில் தீபன் நடித்த ‘அந்த நிலாவதான் கையில பிடிச்சேன் என் ராஜாவுக்காக’... பாடல் பட்ட தொட்டியெங்கும் ஒலித்தது.
4. மீண்டும்
சரவணன் சுப்பையா இயக்கத்தில் ‘மீண்டும்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.
5. நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும் சிறிய தீவு நாடான நியூசிலாந்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது.