சினிமா துளிகள்

புதிய வீடு வாங்கிய சோனாக்சி சின்ஹா + "||" + Purchased new home Sonakshi Sinha

புதிய வீடு வாங்கிய சோனாக்சி சின்ஹா

புதிய வீடு வாங்கிய சோனாக்சி சின்ஹா
இந்தி நடிகர், நடிகைகள் சம்பாதித்த பணத்தில் மும்பையில் சொத்துக்கள் வாங்கி குவிக்கிறார்கள். சிலர் வீடுகள் வாங்குகிறார்கள்.
சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன், அலியாபட், ஜான்வி கபூர் ஆகியோர் பல கோடிக்கு அடுக்குமாடி வீடுகள் வாங்கினர். தற்போது நடிகை சோனாக்சி சின்ஹாவும் மும்பை பாந்த்ரா பகுதியில் 4 படுக்கை அறை கொண்ட புதிய வீடு வாங்கி இருக்கிறார். இவர் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ளார். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக தபாங் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்சி சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. சோனாக்சி சின்ஹா கூறும்போது, ‘நான் நடிகையானதும் எனது வருமானத்தில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும்’ என்று ஆசை இருந்தது. 30 வயதுக்குள் அதை நிறைவேற்ற வேண்டும் என்று கனவு கண்டேன். அது இப்போது நனவாகி இருக்கிறது. இது மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது மும்பை ஜூஹூ பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். அங்குதான் இருப்பேன். புதிய வீட்டை முதலீடு எண்ணத்தோடு வாங்கி இருக்கிறேன் என்றார்.