சினிமா துளிகள்

காஜல் அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் இல்லாதது ஏன்? + "||" + To Kajal Agarwal Image opportunities Why not

காஜல் அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் இல்லாதது ஏன்?

காஜல் அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் இல்லாதது ஏன்?
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் பிரபலமாக இருக்கும் கதாநாயகிகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். இவருடைய ‘பளிச்’ தோற்றமே பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.
இவர் கைவசம், ‘இந்தியன்-2’ என்ற ஒரே ஒரு படம் மட்டுமே இருக்கிறது. வேறு படங்கள் எதுவும் இல்லை. பொதுவாகவே ஒரு நடிகை திருமணம் செய்துகொண்டால் அவர், ‘மார்க்கெட்’ இழந்து விடுவார். இது, காஜல் அகர்வாலுக்கும் பொருந்துகிறது.

இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பின் இவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. இதற்கு அவர் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்பதும் ஒரு காரணம் என்று பேசப்படுகிறது.