சினிமா துளிகள்

பா.ரஞ்சித்துடன் கைகோர்த்த யோகிபாபு + "||" + Hand in hand with Pa. Ranjith Yogibabu

பா.ரஞ்சித்துடன் கைகோர்த்த யோகிபாபு

பா.ரஞ்சித்துடன் கைகோர்த்த யோகிபாபு
டைரக்டர் பா.ரஞ்சித், படங்களை இயக்குவதுடன் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கி, தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
‘பரியேறும் பெருமாள்,’ ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களை தயாரித்த அவர் அடுத்து, ‘ரைட்டர்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இதையடுத்து அவர் யோகிபாபுவை கதாநாயகனாக வைத்து, ‘பொம்மை நாயகி’ என்ற படத்தை தயாரிக்கிறார். சான் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.