சினிமா துளிகள்

மீண்டும் விஷால் படத்தில் மம்தா + "||" + Again Mamta in Vishal movie

மீண்டும் விஷால் படத்தில் மம்தா

மீண்டும் விஷால் படத்தில் மம்தா
தமிழில் 2006-ல் திரைக்கு வந்த சிவப்பதிகாரம் படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.
தொடர்ந்து குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க ஆகிய படங்களிலும் நடித்தார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சினிமாவை விட்டு விலகி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் மம்தா மோகன்தாஸ் குணமடைந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஷாலுடன் எனிமி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் ஆர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு நாயகியாக மிருணாளினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. எனிமி தவிர மேலும் 2 தமிழ் படங்களில் நடிக்கவும் மம்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் தர்மயுத்தம்; ஜெயிக்கப்போவது யார்?
நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கமாய் ஈர்த்திருக்கிறது, மேற்கு வங்காளம்.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில், தனித்து தெரிவது மேற்கு வங்காளம்தான்.