சினிமா துளிகள்

அடர்ந்த காட்டில் ‘ஓட்டம்’ + "||" + Ottam film in the dense forest

அடர்ந்த காட்டில் ‘ஓட்டம்’

அடர்ந்த காட்டில் ‘ஓட்டம்’
125 படங்களை இயக்கி சாதனை புரிந்தவர், மறைந்த டைரக்டர் ராம.நாராயணன். இவரிடம் ‘ராஜகாளியம்மன்’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘மண்ணின் மைந்தன்’ ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்த எம்.முருகன், ‘ஓட்டம்’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் இவரே எழுதியிருக்கிறார்.
படத்துக்கு இசையமைத்து கதாநாய கனாகவும் நடிக்கிறார், எஸ்.பிரதீப்வர்மா. இவருக்கு ஜோடியாக பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோஹி நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த அனுஸ்ரேயா இன்னொரு நாயகியாக அறிமுகம் ஆகிறார். வில்லன் வேடத்தில் தயாரிப்பாளர் ரவிசங்கர் நடிக்கிறார்.

சென்னை, கோவை, சிக்மகளூர் மற்றும் சக்கலேஷ்புராவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.‘‘இது மர்மங்கள் நிறைந்த திகில் படம். திடுக்கிடும் திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது’’ என்கிறார், டைரக்டர் எம்.முருகன்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு பெசன்ட் நகரில் மினி மாரத்தான் ஓட்டம்
சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு பெசன்ட் நகரில் மினி மாரத்தான் ஓட்டம் கூடுதல் டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
2. மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. மருத்துவக்கல்லூரி சாலையில் திறந்த சில மணி நேரத்தில் பெண்கள் திரண்டு வந்ததால் டாஸ்மாக்கை பூட்டிவிட்டு ஊழியர்கள் ஓட்டம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் திறந்த சில மணிநேரத்தில் பெண்கள் திரண்டு வந்ததால் டாஸ்மாக்கை பூட்டி விட்டு ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கடம்பூர்-கங்கைகொண்டான் இரட்டை ரெயில் பாதையில் அதிவிரைவாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
கடம்பூர்-கங்கைகொண்டான் இடையே இரட்டை ரெயில் பாதையில் அதிவிரைவாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.