சினிமா துளிகள்

ராயர் பரம்பரை: காதலே பிடிக்காத கதாநாயகனும் 3 கதாநாயகிகளும்... + "||" + Rauar Paramparai: The protagonist and 3 heroines who do not like love ...

ராயர் பரம்பரை: காதலே பிடிக்காத கதாநாயகனும் 3 கதாநாயகிகளும்...

ராயர் பரம்பரை: காதலே பிடிக்காத கதாநாயகனும் 3 கதாநாயகிகளும்...
காதலே பிடிக்காத, காதல் என்றாலே விலகி ஓடுகிற ஒரு கதாநாயகனையும், 3 கதாநாயகிகளையும் வைத்து, ‘ராயர் பரம்பரை’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.
 ‘கழுகு’ கிருஷ்ணா கதாநாயகனாகவும், சரண்யா நாயர், தெலுங்கு பட நாயகி மும்பை அனுசுலா, மும்பை மாடல் கிருத்திகா ஆகிய 3 அழகிகள் கதாநாயகிகளாகவும் நடித்து இருக்கிறார்கள். ஆனந்தராஜ் வில்லனாக வருகிறார். இவர்களுடன் கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு  செய்து இருக்கிறார், ராம்நாத் டி.

சின்னசாமி மவுனகுரு தயாரித்துள்ளார். படப்பிடிப்பு பொள்ளாச்சியில் 45 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. ‘சென்டிமெண்ட்’ கலந்து காமெடியாக கதை சொல்லியிருப்பதாக டைரக்டர் ராம்நாத் டி கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊத்துக்கோட்டை அருகே ரூ.24 கோடியில் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
ஊத்துக்கோட்டை அருகே வெள்ளத்தால் சேதம் அடைந்த கிருஷ்ணா கால்வாயில் ரூ.24 கோடியில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.