மீண்டும் நடிக்கும் தீபன்


மீண்டும் நடிக்கும் தீபன்
x
தினத்தந்தி 22 Feb 2021 10:57 AM GMT (Updated: 2021-02-22T16:27:28+05:30)

பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனுடன் நடித்து பிரபலமானவர் தீபன்.

முதல் மரியாதை  படத்தில் தீபன் நடித்த ‘அந்த நிலாவதான் கையில பிடிச்சேன் என் ராஜாவுக்காக’... பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. தொடர்ந்து மிஸ்டர் பாரத், ஊர்க்குருவி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் உறவினர். மீண்டும் நடிப்பது குறித்து தீபன் கூறும்போது, ‘எனக்கு முதல் மரியாதை படம் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது. எம்.ஜி.ஆர் உறவினர் என்பதால் இயக்குனர்கள் என்னை அணுக தயங்கினர். இதனால் படங்கள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ‘கேர் ஆப் காதல்’ படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க வந்தேன். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்றார். தீபனுக்கு மேலும் சில புதிய படங்களில் நடிக்க தற்போது வாய்ப்புகள் வந்துள்ளன.

Next Story