சினிமா துளிகள்

டைரக்டரை மணந்த நடிகை நிரஞ்சனி + "||" + Married the director Actress Niranjani

டைரக்டரை மணந்த நடிகை நிரஞ்சனி

டைரக்டரை மணந்த நடிகை நிரஞ்சனி
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இந்த படத்தில் ரக்‌ஷன் ஜோடியாக நிரஞ்சனி நடித்து இருந்தார்.
தமிழில் துல்கர் சல்மான், ரக்‌ஷன், ரிதுவர்மா, நிரஞ்சனி ஆகியோர் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இந்த படத்தில் ரக்‌ஷன் ஜோடியாக நிரஞ்சனி நடித்து இருந்தார். படப்பிடிப்பில் நிரஞ்சனிக்கும், இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கும் காதல் மலர்ந்து திருமணம் நிச்சயமானது. அஜித்குமார் நடித்து வெற்றிகரமாக ஓடிய காதல் கோட்டை படத்தின் இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகள் நிரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இரண்டாவது மகள் விஜயலட்சுமியும் நடிகையாக இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த காலா உள்ளிட்ட பல படங்களுக்கு நிரஞ்சனி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். தேசிங் பெரியசாமி-நிரஞ்சனி திருமணம் புதுச்சேரியில் நேற்று நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று நிரஞ்சனி கூறியுள்ளார்.