சினிமா துளிகள்

படுக்கைக்கு அழைத்தார் பட அதிபர் மீது நடிகை புகார் + "||" + Invited to bed Actress complains about filmmaker

படுக்கைக்கு அழைத்தார் பட அதிபர் மீது நடிகை புகார்

படுக்கைக்கு அழைத்தார் பட அதிபர் மீது நடிகை புகார்
சினிமா துறையில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக மீ டூவில் பலர் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்தி நடிகை அங்கிதா லோகண்டேவும் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இவர் கங்கனா ரணாவத்துடன் மணிகர்னிகா படத்தில் நடித்து பிரபலமானவர். பாஹி 3 படத்திலும் நடித்துள்ளார். தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இந்தி நடிகர் சுஷாந்த் சிங்குடன் அங்கிதா 6 வருடங்கள் காதலில் இருந்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிதா லோகண்டே அளித்த பேட்டியில், ‘நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு உள்ளானேன். ஒரு படத்தில் நடிக்க சென்றபோது தயாரிப்பாளரிடம் சமரசத்துக்கு தயாராக இருக்க வேண்டும்’ என்றனர். தயாரிப்பாளர் எந்த மாதிரி விரும்புகிறார், உணவு சாப்பிட செல்ல வேண்டுமா? என்றேன். அந்த தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றனர். இதனால் படத்தில் இருந்து வெளியேறினேன். தொலைக்காட்சியில் நடித்து பிரபலமாக இருந்தபோது ஒரு படத்தில் நடிக்க இதேமாதிரி சமரசம் செய்ய அணுகினர். உடனே அங்கிருந்து கிளம்பினேன்'’ என்றார்.