பிரபல இந்தி நடிகர் ரன்தீர் கபூருக்கு கொரோனா


பிரபல இந்தி நடிகர் ரன்தீர் கபூருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 May 2021 2:31 AM GMT (Updated: 1 May 2021 2:31 AM GMT)

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளும் நடக்கின்றன. நடிகர், நடிகைகளும் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ரன்தீர் கபூருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரன்தீர் கபூர் இந்தி நடிகைகள் கரீஷ்மா கபூர், கரீனா கபூர் ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்தீர் கபூர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்றே தெரியவில்லை. லேசான காய்ச்சல் இருந்தது. மூச்சு திணறல் உள்ளிட்ட வேறு எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ஆச்சரியமாக உள்ளது'’ என்று கூறியுள்ளார்.

ரன்தீர் கபூர் உதவியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டு அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story