கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்


கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 17 May 2021 9:49 AM GMT (Updated: 17 May 2021 9:49 AM GMT)

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் மளமளவென உயர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே வந்தார். அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை உதறினார். ஆனால் கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் குவிக்கவில்லை. ஓ.டி.டி.யில் வெளியான அவரது பென்குயின் படமும் வரவேற்பை பெறவில்லை. உடல் எடையை குறைத்ததிலும் தோற்றம் மாறியது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வந்த ரங்குதே தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படுக்கை அறை காட்சிகளிலும் படத்தின் கதாநாயகன் நிதுனுடன் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நிதினுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேசா இப்படி நடித்துள்ளார்? என்று வியந்ததுடன் இனிமேல் அவரை படங்களில் கவர்ச்சியாக பார்க்கலாம் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

Next Story