சினிமா துளிகள்

மீண்டும் ஓ.டி.டி.யில் வித்யாபாலன் படம் + "||" + Back in the OTT Vidyapalan movie

மீண்டும் ஓ.டி.டி.யில் வித்யாபாலன் படம்

மீண்டும் ஓ.டி.டி.யில் வித்யாபாலன் படம்
தமிழில் சூரரை போற்று, பூமி, மூக்குத்தி அம்மன், பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஒ.டி.டி.யில் வந்துள்ளன.
கொரோனாவால் பல மாநிலங்களில் ஊரடங்குகள் பிறப்பித்து தியேட்டர்களை மூடி உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த நூற்றுக்கணக்கான படங்கள் முடங்கி உள்ளன. இதையடுத்து புதிய படங்களை நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழில் சூரரை போற்று, பூமி, மூக்குத்தி அம்மன், பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஒ.டி.டி.யில் வந்துள்ளன. மேலும் சில படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த நிலையில் வித்யாபாலன் நடித்துள்ள ஷெர்னி இந்தி திரைப்படம் அடுத்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். அமித் மசுர்கார் இயக்கி உள்ளார். வனவிலங்குகளுக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்தையும் அதை தடுக்க போராடும் பெண் வன அதிகாரியையும் பற்றிய கதையாக தயாராகி உள்ளது.

ஏற்கனவே வித்யாபாலன் நடித்த சகுந்தலா தேவி திரைப்படமும் கொரோனா ஊரடங்கினால் ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.