வெள்ளித்திரை விருந்தாக ‘மாயத்திரை’


வெள்ளித்திரை விருந்தாக ‘மாயத்திரை’
x
தினத்தந்தி 3 July 2021 9:57 PM GMT (Updated: 3 July 2021 9:57 PM GMT)

பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் அசோக்குமார். இவர் ‘மாயத்திரை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

டூலெட், திரவுபதி ஆகிய படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். அறிமுக டைரக்டர் சம்பத்குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘யு ஏ’ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். 

படத்தை பற்றி டைரக்டர் சம்பத்குமார் பேசுகையில், ‘‘இது ஒரு பேய் படம். ஆனால் வழக்கமான பேய் படங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். பயமுறுத்தும் காட்சிகள் அதிகமாக இருக்காது. குடும்பத்துடன் பார்க்கிற மாதிரி படம். வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வரும்’’ என்றார்.

Next Story