பரபரப்பான சஸ்பென்ஸ்-திகில் படத்தில், ஹன்சிகா மோத்வானி


பரபரப்பான சஸ்பென்ஸ்-திகில் படத்தில், ஹன்சிகா மோத்வானி
x
தினத்தந்தி 11 July 2021 12:00 AM GMT (Updated: 11 July 2021 12:00 AM GMT)

ஹன்சிகா மோத்வானி பரபரப்பான சஸ்பென்ஸ்- திகில் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பற்றி அவரே கூறுகிறார்.

‘‘இது, சுதந்திரமாக இயங்கும் ஒரு பெண்ணின் வாழ்வை மையமாக கொண்ட சஸ்பென்ஸ்-திகில் படம். அந்த பெண் ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறாள். அதில் இருந்து அவள் எப்படி தப்புகிறார் என்பதே கதை.

அனுபவம் மிகுந்த நடிகர்கள், பல்வேறு டைரக்டர்களுடன் பணிபுரிந்த நடிகர்கள், ஒரு கதை சொல்லப்படும்போதே அதன் போக்கையும், அதில் உள்ள திருப்பங்களையும் யூகித்து விடுவார்கள். ஆனால் டைரக்டர் ஸ்ரீநிவாஸ் ஓம்கார் என்னிடம் கதையை சொன்னபோது, அடுத்தது என்ன? என்று யூகிக்க முடியவில்லை.

கதையை அவர் சொல்ல சொல்ல நான் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டேன். கதையில் உள்ள திருப்பங்களும், சஸ்பென்ஸ் காட்சிகளும் ரசிகர்களை மிகவும் கவரும்.

முரளி சர்மா, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ரம்யா புருகு, நாகேந்தர் ராஜு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

Next Story