முன்னோட்டம்

5 கதாநாயகிகள் இணைந்து நடித்தபோது... + "||" + 5 heroines When played together

5 கதாநாயகிகள் இணைந்து நடித்தபோது...

5 கதாநாயகிகள் இணைந்து நடித்தபோது...
ஒரே படத்தில் 5 கதாநாயகிகள் இணைந்து நடித்தால்...? தயாரிப்பாளர், டைரக்டரின் நிலைமை என்னவாகும்?
ஒரு படத்தில் 2 கதாநாயகிகள் இணைந்து நடித்தாலே அவர்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படும். இரண்டு பேருக்கும் இடையே விவகாரம் வெடிக்கும். அப்படி இருக்கும்போது, ஒரே படத்தில் 5 கதாநாயகிகள் இணைந்து நடித்தால்...? தயாரிப்பாளர், டைரக்டரின் நிலைமை என்னவாகும்?

‘‘எங்களுக்கு அப்படி விபரீதமாக எதுவும் நடக்கவில்லை. மாறாக 5 பேர்களும் தோழிகள் ஆகிவிட்டார்கள். எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது’’ என்றார், டைரக்டர் டீகே. இவர், ‘யாமிருக்க பயமே, ’ ‘கவலை வேண்டாம், ’ ‘காட்டேரி’ ஆகிய படங்களை இயக்கி யவர். இப்போது 5 கதாநாயகிகளை வைத்து, ‘கருங்காப்பியம்’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். அவர் மேலும் கூறுகையில்...

‘‘இந்த படத்தில் காஜல் அகர்வால், ஜனனி, ரெஜினா கசன்ட்ரா, ரைசா வில்சன், ஈரான் நாட்டைச் சேர்ந்த நொய்ரிகா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் கலை யரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய் ஆகியோரும் நடிக்கிறார்கள்.