கணவரிடம் சண்டையிட்டு கதறி அழுத ஷில்பா ஷெட்டி


கணவரிடம் சண்டையிட்டு கதறி அழுத ஷில்பா ஷெட்டி
x
தினத்தந்தி 29 July 2021 5:53 AM GMT (Updated: 29 July 2021 5:53 AM GMT)

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றி பணம் சம்பாதித்த புகாரில் ராஜ்குந்த்ரா கைதாகி உள்ளார். ஷில்பா ஷெட்டிக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில் ஆபாச பட வழக்கில் சிக்கிய கணவரிடம் ஷில்பா ஷெட்டி சண்டை போட்டு கதறி அழுத தகவல் தற்போது வெளியாகி உள்ளது.போலீசார் ராஜ்குந்த்ராவை அழைத்துக்கொண்டு ஷில்பா ஷெட்டி வீட்டில் சோதனையிட சென்றனர். அப்போது ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை நடத்தினர். இதனால் மனம் உடைந்த ஷில்பா ஷெட்டி போலீசார் முன்னிலையில் ராஜ்குந்த்ராவிடம் வாக்குவாதம் செய்து அழுது சண்டை போட்டுள்ளார்.

“நீங்கள் செய்த காரியத்தால் குடும்பத்துக்கு பெரிய அவப்பெயர் வந்துவிட்டது. பண நஷ்டமும் ஏற்பட்டு உள்ளது. சமூகத்தில் இருந்த நல்ல பெயரை கெடுத்துவிட்டீர்களே. நம்மிடம் என்ன இல்லை, இப்படித்தான் சம்பாதிக்க வேண்டுமா'' என்றெல்லாம் பேசி சண்டை போட்டுள்ளார்.இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு சமாதானம் செய்துள்ளனர். ஆபாச பட செயலி மூலம் ராஜ்குந்த்ரா 5 மாதத்தில் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

Next Story