சினிமா துளிகள்

‘2000’ படத்தில், ஆட்சேபகரமான காட்சிகள் 24 இடங்களில் வெட்டு + "||" + In the 2000 film, Objectionable scenes Cut in 24 places

‘2000’ படத்தில், ஆட்சேபகரமான காட்சிகள் 24 இடங்களில் வெட்டு

‘2000’ படத்தில், ஆட்சேபகரமான காட்சிகள் 24 இடங்களில் வெட்டு
1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, ‘2000’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது.
இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படம் மத்திய அரசை விமர்சிப்பதாக கூறி, சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். அதனால், மறுபரிசீலனை குழுவினருக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. கவுதமி தலைமையிலான மறுபரிசீலனை குழுவினர் படத்தை பார்த்து, 105 இடங்களில் வெட்டுகள் சொல்லப்பட்டது.

வெட்டுகள் கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் ஆதாரங்களும், ஆவணங்களும் கொடுக்கப்பட்டதால், 24 வெட்டுகளாக குறைக்கப்பட்டது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தில் கராத்தே வெங்கடேஷ், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்சன், கற்பகவல்லி, பிரியதர்சினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கோ.பச்சியப்பன் தயாரிக்க, ருத்ரன் பராசு கதாநாயகனாக நடிக்க ருத்ரன் டைரக்டு செய்துள்ளார். கதாநாயகி, சர்னிகா.