சினிமா துளிகள்

ராஜ் குந்த்ரா மீது கவர்ச்சி நடிகை பாலியல் புகார் + "||" + On Raj Kundra Sexy actress Sexual harassment

ராஜ் குந்த்ரா மீது கவர்ச்சி நடிகை பாலியல் புகார்

ராஜ் குந்த்ரா மீது கவர்ச்சி நடிகை பாலியல் புகார்
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்த புகாரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்ளார்.
ராஜ்குந்த்ராவின் ஆபாச படங்களில் நடித்த நடிகைகளிடம் விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா தனக்கு ராஜ்குந்த்ரா பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

புகார் மனுவில், ‘ராஜ்குந்த்ரா 2019-ல் எனது வீட்டுக்கு திடீரென்று வந்தார். நான் தடுத்தும் பொருட்படுத்தாமல் என்னை முத்தமிட ஆரம்பித்தார். உங்களுக்கு திருமணம் ஆகி விட்டது. உங்கள் மனைவி ஷில்பா ஷெட்டிக்கு என்ன ஆனது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அதில் சில பிரச்சினை உள்ளது. நான் வீட்டில் இருக்கும்போது மன அழுத்தத்தில்தான் இருக்கிறேன்’ என்றார். ‘எனக்கு பயமாக இருக்கிறது. வேண்டாம்’ என்றேன். அவர் கேட்கவில்லை. இதனால் ராஜ்குந்த்ரா பிடியில் இருந்து தப்பி ஓடி குளியல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டேன். அவர் புறப்படுவதுவரை வெளியே வரவில்லை’ என்று கூறியுள்ளார்.