சாருஹாசனின் ‘தாதா 87' தெலுங்கு ரீமேக் படத்துக்கு தடை


சாருஹாசனின் ‘தாதா 87 தெலுங்கு ரீமேக் படத்துக்கு தடை
x
தினத்தந்தி 7 Sep 2021 7:11 AM GMT (Updated: 7 Sep 2021 7:11 AM GMT)

சாருஹாசன், ஜனகராஜ், பாலாசிங், மாரிமுத்து ஆகியோர் நடித்து 2019-ல் வெளியான படம் தாதா 87.

சாருஹாசன், ஜனகராஜ், பாலாசிங், மாரிமுத்து ஆகியோர் நடித்து 2019-ல் வெளியான படம் தாதா 87. விஜய் ஶ்ரீ தயாரித்து, இயக்கி இருந்தார். இந்த படத்தை தெலுங்கில் சாய்குமார் நடிக்க ஒன் பை டூ என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இதற்கு டைரக்டர் விஜய் ஶ்ரீ எதிர்ப்பு தெரிவித்தார். “என்னிடம் அனுமதி பெறாமல் தாதா 87 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வது அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. தாதா 87 தெலுங்கு ரீமேக்கை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பேன்'' என்று கூறினார்.

இந்த நிலையில் தெலுங்கில் ஒன் பை டூ படப்பிடிப்பை முடித்து ஐதராபாத்தில் உள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். ஆனால் சர்ச்சை காரணமாக படத்துக்கு அனுமதி வழங்க தணிக்கை குழுவினர் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து டைரக்டர் விஜய் ஶ்ரீ கூறும்போது, “தாதா 87 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய என்னிடம் அனுமதி பெறவில்லை என்று தணிக்கை குழுவுக்கு மனு அனுப்பி இருந்தேன். அதன் அடிப்படையில் ஒன் பை டூ படத்துக்கு தணிக்கை குழு அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. இதற்காக தணிக்கை குழுவுக்கு நன்றி’' என்றார்.

Next Story