பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்த சூர்யா - கார்த்தி


பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்த சூர்யா - கார்த்தி
x
தினத்தந்தி 13 Sep 2021 2:57 PM GMT (Updated: 2021-09-13T20:27:01+05:30)

முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.

‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும், யூடியூப்பிலும் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.

Next Story